கல்முனை பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மொத்தமாக 1 இலட்சத்து 61 ஆயிரத்து 44 தடுப்பூசிகளைச் செலுத்தி இதுவரை 67.82 வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் அதிகூடியதாக நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 86.46% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய 10,837 பேரில் இதுவரை 9370 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 84.03% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய 15,174 பேரில் இதுவரை 12,752பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 81.08% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய 13,670 பேரில் இதுவரை 11,183 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை இறக்காமம் பிரிவில் 79.65%, காரைதீவுப் பிரிவில் 77.79%, நிந்தவூர் பிரிவில் 72.76 %, பொத்துவில் பிரிவில் 67.46 %, கல்முனை தெற்குப் பிரிவில் 67.16%, அட்டாளைச்சேனைப் பிரிவில் 65.36%, சாய்ந்தமருது பிரிவில் 65.08%, அக்கரைப்பற்று பிரிவில் 62.46%, சம்மாந்துறை பிரிவில் 57.06%, கல்முனை வடக்கு பிரிவில் 50.48 % தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
பிராந்தியத்தில் அதிகுறைந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட இடமாக கல்முனை வடக்குப் பிரிவு உள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய 21,198 பேரில் இதுவரை ஆக 10,702 பேருக்கே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் இது 50.48 வீதமாகவும் பிராந்திய தடுப்பூசி செலுத்திய அறிக்கையில் பதியப்பட்டுள்ளது.
(காரைதீவு குறூப் நிருபர்)
No comments:
Post a Comment