கரைச்சி வீடு ஒன்றில் 15 லட்சம் ரூபா பெறுமதியான 100 கிலோ தங்கூசி வலை மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, August 2, 2021

கரைச்சி வீடு ஒன்றில் 15 லட்சம் ரூபா பெறுமதியான 100 கிலோ தங்கூசி வலை மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைச்சி குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து விற்பனை செய்யப்பட்ட 100 கிலோ மதிக்கத்தக்க தடை செய்யப்பட்ட தங்கூசி வலை மீட்கப்பட்டது.

குறித்த வலையின் பெறுமதி ஏறத்தாழ 15 லட்சம் மதிக்கத்தக்கது எனவும், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையினர் தெரிவிக்கின்றனர்.

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து யாழப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை உத்தியோகத்தர் கு. சங்கீதன், முல்லைதீவு மாவட்ட நீரியல் வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர்களான யோ.பிரசாத், மா.இளவரசன் ஆகியோர் தேடுதல் மேற்கொண்டனர்.

இதன் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் மதிக்கத்தக்க 100 கிலோ மதிக்கத்தக்க தடை செய்யப்பட்ட தங்கூசி வலை மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(பரந்தன் குறூப் நிருபர்)

No comments:

Post a Comment