அமெரிக்காவின் அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி போடுபவர்களுக்கு 100 டொலர் பரிசு வழங்குமாறு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் நியுயோர்க்கில் தடுப்பூசி போடுபவர்களுக்கு 100 டொலர் பரிசு என்று மாநகர மேயர் அறிவித்திருந்தார். இதனை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த ஜனாதிபதி ஜோ பைடன், கொரோனாவுக்கு எதிரான யுத்தம் தொடர்வதாகத் தெரிவித்தார். புதிய சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள், இராணுவத்தில் பணிபுரிவோர் ஆகியோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா இல்லையா என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் முகக்கவசம் அணிந்து, வாரம் ஒரு முறை வைரஸ் தொற்றுப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
அமெரிக்கர்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க, அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்காவில் வைரஸ் தொடர்பான உயிரிழப்பு வாரத்திற்கு சுமார் 2,000 என அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களில உச்ச புள்ளியாக காணப்படுகிறது. அங்கு நாளுக்கு சாதனை எண்ணிக்கையாக 60,000 தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகிறது.
குறிப்பாக டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுவதால் அங்கு முழுமையாக தடுப்பு மருந்து பெற்றவர்களும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக கொவிட் தொற்று பதிவாகும் பிராந்தியங்களில் உள்ளகத்தில் முகக்கவசம் அணிவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment