60 வகையான மருந்துப் பொருட்களுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தின் கீழ் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவிப்பில், 38 வகை கண் வில்லைகள், இரத்த குளுகோஸ் அளவீடு மானி, இரத்த குளுகோஸ் அளவீடு மானிக்கான சோதனைக் கீற்றுகள் மற்றும் இருதய சிகிச்சைகளுக்கான இரு வகை ஸ்டென்ட் (Stent) உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க மருத்துவ உபகரணங்கள் விலை நிர்ணயம் செய்தல் தொடர்பான ஒழுங்கு விதிகளுக்கமைய குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment