முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழக்கும் குடும்பங்களுக்கு ரூபா. 2,000 - பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழக்கும் குடும்பங்களுக்கு ரூபா. 2,000 - பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை

நாடு முடக்க நிலையில் உள்ள காலப்பகுதியில் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் குடும்பங்களுக்கு ரூ. 2,000 உதவித் தொகையொன்றை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.

அதற்கமைய, இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் தொடர்பான பட்டியலை தயாரிக்குமாறு, மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எம்.எம். சித்திரானந்தவினால், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment