பராலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரேயொரு இலங்கை வீராங்கனை குமுது திசாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

பராலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரேயொரு இலங்கை வீராங்கனை குமுது திசாநாயக்க

(எம்.எம்.சில்வெஸ்டர்)

டோக்கியோ பராலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரேயொரு இலங்கை வீராங்கனையாக விளங்கும் குமுது திசாநாயக்கவின் போட்டி நிகழ்வு நாளையதினம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி காலை 8.39 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பெண்களுக்கான டி47 பிரிவின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் குமுது திசாநாயக்க, இந்தப் போட்டித் தூரத்தை 13.30 செக்கன்களில் ஓடி முடித்தமையே குமுது திசாநாயக்கவின் சிறந்த நேரப் பெறுதியாக காணப்படுகிறது.

நாளையதினம் நடைபெறும் இந்தப் போட்டியில் 2 தகுதிகாண் சுற்றுகள் இடம்பெறவுள்ளன. இதில் முதலாவது தகுதிகாண் சுற்றிலேயே குமுது திசாநாயக்க பங்கேற்கிறார்.

ஒவ்வொரு தகுதிகாண் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாகவும், ஏனைய இரண்டு பேர் அதிசிறந்த நேரப் பெறுதி ரீதியிலும் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவர்.

இதே‍வேளை, இவர் பங்கேற்கும் நீளம் பாய்தல் போட்டி எதிர்வரும் மூன்றாம் திகதியன்று நடைபெறும்.

No comments:

Post a Comment