ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாட்டை முடக்கினால் பாத்தாயிரம் உயிர்களை பாதுகாக்க முடியும் - அறிக்கை மூலம் அரசாங்கத்திற்கும் அறிவித்துள்ளோம் என்கிறது இலங்கை மருத்துவ சங்கம் - News View

Breaking

Saturday, August 28, 2021

ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாட்டை முடக்கினால் பாத்தாயிரம் உயிர்களை பாதுகாக்க முடியும் - அறிக்கை மூலம் அரசாங்கத்திற்கும் அறிவித்துள்ளோம் என்கிறது இலங்கை மருத்துவ சங்கம்

எம்.மனோசித்ரா

உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வு கூறலின்படி செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாடு முடக்கப்பட்டால் 7500 உயிர்களைக் காப்பற்ற முடியும். அதே போன்று ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுமானால் மேலும் 10000 உயிர்களை பாதுகாக்க முடியும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குனரத்ன தெரிவித்தார்.

டெல்டா திரிபின் புதிய மாறுபாடுகள் ஏனைய மாகாணங்களுக்கும் நிச்சயம் பரவக்கும் கூடும் என்று எச்சரித்துள்ள வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன, தற்போது நாடு செல்லும் வகையில் தொற்றினைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

டெல்டா பரவல் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கில் மக்கள் செயற்படும் விதம் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பில் நூறு வீதம் டெல்டா திரிபே பரவியுள்ளது. டெல்டா திரிபு மாற்றமடைந்து புதியதொரு மாறுபாடே கொழும்பில் அதிகளவில் பரவுகிறது. இந்த புதிய திரிபு ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாடு முடக்கப்பட்டால் 7500 உயிர்களைக் காப்பற்ற முடியும். அதே போன்று ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுமானால் மேலும் 10000 உயிர்களை பாதுகாக்க முடியும். இதனை குறித்த எதிர்வுகூறல் அறிக்கை மூலம் அரசாங்கத்திற்கும் அறிவித்துள்ளோம் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad