நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 24, 25ஆம் திகதிகளில் (செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை) திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்போது சில்லறை வர்த்தகத்திற்கு அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ள அவர், மொத்த விற்பனைக்காக மாத்திரம் இறுக்கமான சுகாதார வழிகாட்டல்களை பேணி அனுமதி வழங்கப்படுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
திடீரென அதே தினத்தில் அறிவிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக, பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு வந்த தங்களது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் போனதாக, விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையினைக் கருத்திற்கொண்டு, விவசாயிகள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கும், மொத்த விற்பனையாளர்கள் நடமாடும் விற்பனையின் பொருட்டு விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை மற்றும் புதன்கிழமை (24, 25) ஆகிய இரு தினங்களும் நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment