சிறைச்சாலைகள் திணைக்களத்திலுள்ள 2305 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை : பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள கைதிகள் அதிவிசேட சிறையில் தடுத்து வைப்பு - அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 4, 2021

சிறைச்சாலைகள் திணைக்களத்திலுள்ள 2305 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை : பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள கைதிகள் அதிவிசேட சிறையில் தடுத்து வைப்பு - அமைச்சர் அலி சப்ரி

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் 2305 பதவி வெற்றிடங்கள் நிலவுவதுடன் அதற்கான நியமனங்களை வழங்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் சிறைச்சாலைகள் புலனாய்வு கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரியால் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலகளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பதிலளிக்கையில், சிறைச்சாலைகள் பாதுகாப்பு அலுவலகர்களாக 7762 அதிகாரிகள் உள்ளனர். ஆனால் 5567 பேரே தற்போது சேவையில் உள்ளனர். 2305 பதவி வெற்றிடங்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நிலவுகிறது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள கைதிகள் அதிவிசேட பாதுகாப்பு பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பூசா, அங்குனுகொல மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

பூசா, அங்குனுகொல மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளில் தொலைபேசி பாவனையும் தடை செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய வகையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைகளில் செயல்படும் அவசர செயலணியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலணிக்கு இராணுவத்திலிருந்து விலகியுள்ள 500 பேரை இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment