மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு Sinopharm தடுப்பூசி வழங்கப்படவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 4, 2021

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு Sinopharm தடுப்பூசி வழங்கப்படவுள்ளது

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நாளை (05) முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு Sinopharm தடுப்பூசியின் முதல் டோஸ் விநியோகிக்கப்படவுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, IDH வைத்தியசாலை, அவிசாவளை வைத்தியசாலை, விஹாரமகாதேவி பூங்கா ஆகிய இடங்களில் நாளை (05) மு.ப. 8.30 மணி முதல் Sinopharm தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படவுள்ளது.

கடந்த சில தினங்களாக Astra Zeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டு வருவதன் காரணமாக, மேல் மாகாணத்தில் கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்குவது இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment