ஒலிம்பிக்கில் 2016, 2020 ஒரே பிரிவில் ஒரே வெற்றியாளர்கள்..! - News View

Breaking

Friday, August 6, 2021

ஒலிம்பிக்கில் 2016, 2020 ஒரே பிரிவில் ஒரே வெற்றியாளர்கள்..!

32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் 8 ம் திகதி வரைக்கும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் இடம்பெற்ற குண்டு எறிதல் போட்டியில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது, குறிப்பாக இறுதியாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016 இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம், இடங்களைப் பிடித்துக் கொண்ட அதே போட்டியாளர்களே இம்முறை ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான போட்டியிட முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த கொண்டமை கவனிக்கத்தக்கது.

ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே வெற்றியாளர்கள் அடுத்தடுத்து வந்த ஒலிம்பிக் போட்டிகளில் அதே இடத்தை பெற்றுக் கொண்ட வரலாற்று சம்பவம் இதன் மூலம் பதிவானது. 

அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் க்ரசர் மற்றும் ஜோ கோவக்ஸ் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த டோமாஸ் வால்ஷ் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் வென்ற அதே நிலைகளை மீண்டும் பெற்றுள்ளனர்.

முடிவுகள்:
ரியோ 2016 ஆண்கள் குண்டு எறிதல்
தங்கம் - அமெரிக்கா - ரியான் க்ரசர்
வெள்ளி - அமெரிக்கா - ஜோ கோவக்ஸ்
வெண்கலம் - நியூசிலாந்து - தாமஸ் வால்ஷ்

டோக்கியோ 2020 ஆண்கள் குண்டு எறிதல்
தங்கம் - அமெரிக்கா - ரியான் க்ரசர்
வெள்ளி - அமெரிக்கா - ஜோ கோவக்ஸ்
வெண்கலம் - நியூசிலாந்து - தாமஸ் வால்ஷ்

No comments:

Post a Comment