18 கிலோ மான் இறைச்சியுடன் மூவர் கைது : பிரதான சந்தேக நபர் தப்பி ஓட்டம் - News View

Breaking

Friday, August 27, 2021

18 கிலோ மான் இறைச்சியுடன் மூவர் கைது : பிரதான சந்தேக நபர் தப்பி ஓட்டம்

புத்தளம், தப்போவ சரணாலய எல்லைப்பகுதிக்கு உட்பட்ட குடாவெவ பகுதியில் 18 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதின்போது ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக கருவலகஸ்வெவ வன விலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவ வன விலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு நேற்று கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்போவ சரணாலய எல்லைப் பகுதியில் வைத்து வேன் ஒன்றை பரிசோதனை செய்த கருவலகஸ்வெவ வன விலங்கு அலுவலக அதிகாரிகள் குழு, குறித்த வேனுக்குள் இருந்து 5 கிலோ கிராம் மான் இறைச்சியை கைப்பற்றி. அந்த வேனில் பயணித்த இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன், வேனையும் தமது பொறுப்பில் எடுத்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அதே பகுதியில் மற்றுமொருவர் 8 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, தப்பிச் சென்றதாக கூறப்படும் பிரதான சந்தேக நபர் 5 கிலோ கிராம் நிறையுள்ள மான் இறைச்சியை அவ்விடத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளதாகவும், அந்த மான் இறைச்சியையும் கருவலகஸ்வெவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தப்பிச் சென்றுள்ள பிரதான சந்தேக நபர் தப்போவ சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மான்களை இறைச்சிக்காக வெட்டி அதனை எடுத்து கருவலகஸ்வெவ, மாரவில மற்றும் வென்னப்புவ உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனைகளில் ஈடுபடுவதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad