நாடு முழுவதும் 17,921 டெங்கு நோய்த் தொற்றுகள் : 10 உயிரிழப்புக்கள் : அறிகுறிகள் காணப்படின் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 29, 2021

நாடு முழுவதும் 17,921 டெங்கு நோய்த் தொற்றுகள் : 10 உயிரிழப்புக்கள் : அறிகுறிகள் காணப்படின் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 17,921 டெங்கு நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் சுமார் 39.1% டெங்கு தொற்றுகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1,161 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 3,292 ஆகும்.

கடந்த மாதத்தை விட இம்மாதம் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது குறைவு ஏற்பட்டிருந்தாலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் கடந்த ஜூலை 31 வரை டெங்கு தொற்று தொடர்பில் 10 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

டெங்கு நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்

திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்)

உணவு, பாண வகைகளை நிராகரித்தல்

கடுமையான தாகம்

நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)

கடுமையான வயிற்று வலி

தூக்க நிலைமை

நடத்தையில் மாற்றம் ஏற்படல்

சிவப்பு / கறுப்பு / கபில நிற வாந்தியெடுத்தல்

கறுப்பு நிற மலம் வெளியாதல்

குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)

தலைசுற்றுதல்

கைகால்கள் குளிரடைதல்

No comments:

Post a Comment