தனது எதிர்காலத்தைக் கணிக்கும் பிரேசில் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, August 29, 2021

தனது எதிர்காலத்தைக் கணிக்கும் பிரேசில் ஜனாதிபதி

பிரேசில் நாட்டில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி தன்னுடைய எதிர்காலத்தை மூன்று வழிகளில் பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தாம் கொல்லப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறலாம் என்று தமது எதிர்காலம் குறித்து மூன்று கணிப்புகளை வெளியிட்டுள்ளார் பிரேசில் ஜனாதிபதி சயீர் பொல்சனாரூ.

முன்னாள் ஜனாதிபதியான இடதுசாரி அரசியல்வாதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவை விட இவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

பிரேசில் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் ஜெய்ர் போல்சனோரா. கொரோனா வைரஸ் தொற்று உலகில் வேகமாக பரவிய காலத்தில் மாஸ்க் அணிய வேண்டாம், விவசாயிகள் துப்பாக்கி வைத்துக் கொள்ளுங்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டால் முதலையாகக் கூட மாறலாம் எனக் கூறி கடும் விமர்சனத்திற்கு உள்ளானவர். பிரேசில் உச்ச நீதிமன்றம் மாஸ்க் அணியாததால் அபராதம் கூட விதித்தது.

அடுத்த ஆண்டு பிரேசிலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில்தான் நடைபெறும். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படும் என தேர்தல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரேசிலின் தலைமை தேர்தல் நீதிமன்றம் அந்நாட்டின் வாக்குப்பதிவு முறையில் எந்த கோளாறும் இல்லை என்று புதன்கிழமையன்று கூறியிருந்தது.

மின்னணு இயந்திரம் மீது ஜனாதிபதிக்கு நம்பிக்கையில்லை. மேலும், ஜனாதிபதி தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

தீவிர வலது சாரி கொள்கை கொண்ட ஜெய்ர் போல்சனோரா, கிறிஸ்துவ அமைப்பு தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறும்போது ‘‘எனது எதிர்காலத்தில் கைது, கொலை அல்லது வெற்றி ஆகிய மூன்று மாற்று வழிகள் உள்ளன. இதில் முதலாவது கூறியது குறித்து கேள்வி எழுப்ப வேணடியதில்லை. ஏனென்றால் உலகில் உள்ள எவராலும் என்னை மிரட்ட முடியாது’’ என்றார்.

கிறிஸ்துவ அமைப்பு தலைவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக அடுத்த மாதம் 8ஆம் திகதி நாடு தழுவிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பரப்புரையில் ஈடுபட்டு இருந்த சயீர் பொல்சனாரூ கத்தியால் குத்தப்பட்டார்.

No comments:

Post a Comment