12 மரணங்களுடன் நிந்தவூர் ஆபத்தான நிலையில் : மக்களுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ள சுகாதார அதிகாரி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 19, 2021

12 மரணங்களுடன் நிந்தவூர் ஆபத்தான நிலையில் : மக்களுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ள சுகாதார அதிகாரி

நூருல் ஹுதா உமர்

நிந்தவூரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் குறித்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிவிப்பில் தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நிந்தவூர் பிரதேசத்திலும் இந்நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. 

இதுவரை மொத்த தொற்றாளர்கள் 481 பேர் நிந்தவூரில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 12 மரணங்களும் பதிவாகியுள்ளது. இது கவலைக்குரிய விடயமாகும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், தொற்றாளர்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாடு வரக்கூடிய அபாய நிலைமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

எனவே இனிமேலாவது நாம் அனைவரும் எமது அலட்சியப் போக்கினை விடுத்து அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் சுகாதார விதிமுறைகளுடன் வெளியில் நடமாடுவதன் மூலமும் ஏனைய நேரங்களில் வீட்டிலிருந்து பாதுகாப்பு பெறுவதன் மூலமும் கொடிய கொரோனா மரண அபாயத்திலிருந்து எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அத்துடன் ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வதால் மாத்திரமே கொரோனா தொற்றை இல்லாதொழிக்க முடியும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment