டெல்டா தொற்றுக்கு உள்ளாவோரில் 10 சதவீதமானோர் ஒட்சிசன் தேவையுடையோராகவும், தீவிர நிலைமையை அடையக் கூடியவர்களாகவும் உள்ளனர் - விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

டெல்டா தொற்றுக்கு உள்ளாவோரில் 10 சதவீதமானோர் ஒட்சிசன் தேவையுடையோராகவும், தீவிர நிலைமையை அடையக் கூடியவர்களாகவும் உள்ளனர் - விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ

எம்.மனோசித்ரா

நாட்டில் அல்பா தொற்றுக்கு உள்ளானவர்களில் 5 சதவீதமானோரே ஒட்சிசன் தேவையுடையவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் டெல்டா தொற்றுக்கு உள்ளாவோரில் 10 சதவீதமானோர் ஒட்சிசன் தேவையுடையோராகவும், தீவிர நிலைமையை அடையக் கூடியவர்களாகவும் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.

இவ்வாறு ஒட்சிசன் தேவையுடைய தீவிர நிலைமையை அடையக் கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமையின் காரணமாகவே வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் இதுவரையில் வீடுகளிலேயே சிகிச்சை பெற்ற கொவிட் தொற்றாளர்கள் எவரும் மரணிக்கவில்லை என்றும் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளன. இம்மாவட்டத்தில் வீடுகளிலேயே சிகிச்சை பெற்ற கொவிட் தொற்றாளர்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. தொற்று நிலைமை சற்று தீவிரமடைந்த 5 சதவீதமானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த முறைமையை மேல் மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டு ஏனைய மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

டெல்டா தொற்று பரவல் வேகத்தின் அதிகரிப்புடன் தீவிர நிலைமையை அடையும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அல்பா தொற்றுக்கு உள்ளானவர்களில் 5 சதவீதமானோரே ஒட்சிசன் தேவையுடையவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் டெல்டா தொற்றுக்கு உள்ளாவோரில் 10 சதவீதமானோர் ஒட்சிசன் தேவையுடையோராகவும், தீவிர நிலைமையை அடையக் கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment