மேலும் 100,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்தன - News View

Breaking

Monday, August 16, 2021

மேலும் 100,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்தன

மேலும் ஒரு இலட்சம் (100,000) Pfizer தடுப்பூசி டோஸ்கள் இன்று (16) அதிகாலை இலங்கையை வந்தடைந்தன.

நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து கட்டாரின் டோஹாவிற்கு கொண்டு வரப்பட்ட இத்தடுப்பூசி தொகையானது, கட்டார் எயார்வேஸின் QR 668 எனும் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவினால் தயாரிக்கப்படும் Pfizer தடுப்பூசியானது, இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டில் கல்வி நடவடிக்கைகைள முன்னெடுப்பவர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தடுப்பூசிகள் களஞ்சியப்படுத்துவதற்காக, தேசிய குருதி மாற்றீடு நிறுவனத்தின் விசேட களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment