ஒரு கோடியை நெருங்கும் சீனாவிலிருந்து வந்த Sinopharm தடுப்பூசி டோஸ்கள் : இரண்டாம் டோஸ் AstraZeneca அடுத்த வாரம் இலங்கைக்கு வருகிறது - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

ஒரு கோடியை நெருங்கும் சீனாவிலிருந்து வந்த Sinopharm தடுப்பூசி டோஸ்கள் : இரண்டாம் டோஸ் AstraZeneca அடுத்த வாரம் இலங்கைக்கு வருகிறது

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 20 இலட்சம் (2 மில்லியன்) சீன தயாரிப்பு Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்று (22) அதிகாலை ஶ்ரீ லங்கன் விமான சேவை விமானங்கள் இரண்டின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இத்தடுப்பூசி தொகுதிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அதன்படி, இதுவரை நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட Sinopharm தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடியை (91 இலட்சம்) நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலவசமாக கிடைத்தவை (1.1 மில்லியன்)
மார்ச் 31 - 600,000 (0.6 மில்லியன்)
மே 25 - 500,000 (0.5 மில்லியன்)

கொள்வனவு செய்யப்பட்டவை (8 மில்லியன்)
ஜூன் 06 - ஒரு மில்லியன்
ஜூன் 09 - ஒரு மில்லியன்
ஜூலை 02 - ஒரு மில்லியன்
ஜூலை 04 - ஒரு மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்

இதேவேளை, AstraZeneca தடுப்பூசி டோஸ்களின் ஒரு தொகுதி இவ்வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோயியல் நிபுணர் தினூகா குருகே தெரிவித்தார்.

AstraZeneca தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற நபர்களுக்கு இரண்டாவது டோஸாக அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நபர்களுக்கு அவர்களுக்கான திகதி, நேரம் என்பன தொடர்பில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad