COVID தடுப்பூசிகளை பற்றிய பொய்த் தகவல்களை பரப்ப பயன்படுத்தப்படும் TikTok செயலி - News View

About Us

About Us

Breaking

Sunday, July 18, 2021

COVID தடுப்பூசிகளை பற்றிய பொய்த் தகவல்களை பரப்ப பயன்படுத்தப்படும் TikTok செயலி

TikTok செயலியின் ஓர் அம்சம், தடுப்பூசிகளைப் பற்றிய பொய்த் தகவல்களைப் பரப்பப் பயன்படுத்தப்படுவதாக லண்டனில் உள்ள கல்வி நிலையம் எச்சரித்துள்ளது.

Institute for Strategic Dialogue எனும் கல்வி நிலையம், TikTok இல் ஏற்கனவே உள்ள ஒலிகள் பயன்படுத்தப்பட்ட 124 காணொளிகளை ஆராய்ந்தது.

20 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை அந்தக் காணொளிகள் பார்வையிடப்பட்டுள்ளன.

அத்தகைய காணொளிகள் அனைத்தும் தடுப்பூசிகள், அவற்றால் ஏற்படக்கூடும் பக்கவிளைவுகள் ஆகியன பற்றி பயமூட்டும் வண்ணம் அமைந்துள்ளன.

மனிதர்கள் மதிப்பிட்டு காணொளிகளை ஒழுங்குபடுத்தும் நிர்வாக முறையில் ஏற்பட்ட பிழையால், தவறான சில காணொளிகள் தொடர்ந்து செயலியில் காணப்படுவதாக TikTok கூறியது.

சில குறிப்பிட்ட வகைக் காணொளிகளை மதிப்பிட்டு ஒழுங்குபடுத்தும் நடைமுறை முழுமையாகத் தானியக்கமயமாக்கப்படும் என்று TikTok சென்ற வாரம் அறிவித்திருந்தது.

காணொளிகளில் பொய்த் தகவல் இருந்தால் அது பற்றிப் பயனீட்டாளர்கள் புகார் செய்யலாம் என்றும் TikTok தெரிவித்தது.

விதிகளை மீறும் காணொளிகளின் ஒலிப் பதிவுகளை ஆராய்ந்து வருவதாக அது குறிப்பிட்டது. அவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவது தடை செய்யப்படலாம் என்றும் TikTok கூறியது.

No comments:

Post a Comment