ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல் - News View

About Us

About Us

Breaking

Friday, July 30, 2021

ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல்

ஓமான் வளைகுடாவின், அரேபிய கடற்பரப்பில் இஸ்ரேலுக்கு சொந்தமான வணிகப் கப்பலொன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பிரிட்டிஷ் இராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த சம்பவத்தை உடனடியாக ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால் தெஹ்ரானின் உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

பிரிட்டிஷ் இராணுவத்தின் ஐக்கிய இராஜ்ஜியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளின் ஒரு சுருக்கமான அறிக்கை, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகக் கூறியதுடன், ஓமனி தீவான மசிராவின் வடகிழக்கில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு சம்பவம் நடந்தது என்று விவரித்தது.

ஓமானின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து தென்கிழக்கே 185 மைல் தொலைவில் கப்பல் தாக்கப்பட்டுள்ளது.

ஓமான் இத்தாக்குதலை உடனடியாக ஒப்புக் கொள்ளவில்லை, அங்குள்ள அதிகாரிகள் சர்வதேச ஊடகங்களின் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை.

ஈரானின் சிதைந்த அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் வியன்னாவில் ஒப்பந்தத்தை மீட்டெடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தடைபட்டதால், குறித்த கடற்பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

No comments:

Post a Comment