நாளை ஆரம்பமாகவுள்ள இலங்கை - இந்திய அணிகள் மோதும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

நாளை ஆரம்பமாகவுள்ள இலங்கை - இந்திய அணிகள் மோதும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்

எம்.எம்.சில்வெஸ்டர்

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள ஷிகர் தவான தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை கிரிக்கெட் அணியுடன் மோதும் 3 போட்டிகள் கொண்ட சர்வசே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் போது, இலங்கை அணித் தலைவராக நியமிக்கப்பட்ட குசல் ஜனித் பெரேரா தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக இப்போட்டித் தொடரில் பங்கேற்க முடியாது போயுள்ளது.

ஆகையால், இலங்கை கிரிக்கெட் அணிக்கு சகலதுறை வீரரான தசுன் சானக்கவின் தலைமையில் இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த போதிலும், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு தம்மை ஈடுபத்திக் கொண்டிருந்ததால், பயிற்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இப்போட்டித் தொடர் இம்மாதம் 18 ஆம் திகதியன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் 165 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 91 போட்டிகளிலும் இலங்கை 56 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன.

ஏனைய போட்டிகளில் ஒரு போட்டி சமநிலையிலும் 11 போட்டிகளும் முடிவற்ற போட்டிகளாக அமைந்துள்ளன.

இந்த இரண்டு அணிகளுக்கி‍டையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் 18, 20, 23 ஆம் திகதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடர் 25, 27, 29 ஆம் திகதிகளில் இரவு 8 மணிக்கும் ஆரம்பமாகும்.

இந்த அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad