கொவிட்-19 பரவல் நிலை காரணமாக தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை ஜூலை 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டலில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 21ஆம் திகதி தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் ஜூலை 05 முதல் இரு வாரங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் 14 நாட்களின் பின்னர் இம்முடிவு தொடர்பில் மீண்டும் தீர்மானம் எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ், இராணுவம், சுகாதாரம், மின்சாரம், பெட்ரோலியம், நீர் வழங்கல், ஊடகங்கள் மற்றும் தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாகாணங்களுக்கு இடையே பயணிக்க அனுமதி வழங்கப்படும்.
ஜூலை 5 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆயினும் மேல் மாகாணத்தில் நிலவும் கொவிட்-19 தொற்று நிலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment