இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையில், இப்பதவி உயர்வு கிடைத்துள்ளது.
1984 ஆம் ஆண்டு சுங்க அதிகாரியாக இணைந்து கொண்ட இவர், அதன் பின்னர் பல்வேறு பதவி உயர்வுகளை பெற்று தற்போதைய நிலையை அடைந்துள்ளார்.
ரகுமத்தும்மா தம்பதியரின் புதல்வரான இவர், தனது பாடசாலைக் கல்வியை அட்டாளைச்சேனை அல் முனீரா வித்தியாலயத்திலும், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுரி மற்றும் நெல்லிப்பழை மகாஜானக் கல்லுரி ஆகியவற்றிலும் கல்வி பயின்றுள்ளார்.
பாலமுனை நிருபர்
No comments:
Post a Comment