'வித்தியாவை அடுத்து இஷாலினியா?' : மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்..! - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

'வித்தியாவை அடுத்து இஷாலினியா?' : மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்..!

இஷாலினியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெற்ற வேண்டும் எனவும், நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கண்டித்தும் இன்றையதினம் வியாழக்கிழமை (22.07.2021) காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தின் பங்களிப்புடன் குறித்த போராட்டம் இடம் பெற்றது.

இதன்போது மன்னார் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ, சட்டத்தரணி,பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad