உலக பாரம்பரிய சின்னமாக மாறியது ராமப்பா கோவில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

உலக பாரம்பரிய சின்னமாக மாறியது ராமப்பா கோவில்

இந்தியாவில் புதுடில்லி - தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராமப்பா கோவிலை, 'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையம், உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டம், பாலம் பேட்டில் தொன்மை வாய்ந்த ராமப்பா கோவில் உள்ளது.

காகதிய வம்ச மன்னர்களால், 13 ஆம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறப்பு பெற்றது.

இந்த கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இது பற்றி இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது, ராமப்பா கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதற்காக தெலுங்கானா மாநில அரசுக்கும், மக்களுக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். 

இந்த கோவிலுக்கு அனைவரும் சென்று ராமப்பாவை வழிபடுவதுடன், கோவிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் பார்த்து ரசிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment