தொடர்ச்சியான நிராகரிப்புக்களால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்கப் போவது ஒன்றுமில்லை - ரோஹன லக்ஸ்மன் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

தொடர்ச்சியான நிராகரிப்புக்களால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்கப் போவது ஒன்றுமில்லை - ரோஹன லக்ஸ்மன்

(ஆர்.யசி)

தொடர்ச்சியான நிராகரிப்புகளுக்கு மத்தியில் அரசாங்கத்திற்குள் அங்கம் வகிப்பதால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்கப்போவது ஒன்றும் இல்லை. அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அலையொன்று உருவாகிக் கொண்டுள்ள நிலையில் மக்களின் பக்கமே நாம் நிற்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகரும் முன்னாள் செயலாளருமான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

ஆளுந்தரப்புக்குள் எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடுகள் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திற்குள் எமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதை விடவும், மக்களிடம் எமது கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். மீண்டும் தனிக் கட்சியாக நாம் பயணிக்க வேண்டும் என்பதே நாம் இப்போது முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டமாகும்.

இது குறித்து இப்போது தீர்மானம் எடுத்தால் எம்மால் அடுத்த தேர்தல்களில் பலமான கட்சியாக உருவாக முடியும். பழைய ஸ்ரீலங்கா காரர்களை ஒன்றிணைக்கவும் முடியும் என்றார்.

No comments:

Post a Comment