ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது பிலிப்பைன்ஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது பிலிப்பைன்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 55 கிலோ கிராம் பளூதூக்கல் போட்டியில் பிலிப்பைன்ஸின் ஹிடிலின் டயஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஒலிம்பிக் வரலாற்றில் பிலிப்பைன்ஸ் பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

இப்பதக்கம் கொவிட்-19 தோற்று நோயினால் சோர்வுற்ற பிலிப்பைன்ஸ் மக்களுக்கிடையே கொண்டாட்டங்களை அதிகரித்துள்ளது.

தங்கத்தை வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் தங்கத்திற்கான பிலிப்பைன்ஸின் 97 ஆண்டு கால காத்திருப்பையும் டயஸ் நிறைவுக்கு கொண்டு வந்தார்.

பிலிப்பைன்ஸ் முதன்முதலில் 1924 இல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றது. மூன்று வெள்ளி மற்றும் ஏழு வெண்கல பதக்கங்களை ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பிலிப்பைன்ஸ் வென்றுள்ளது.

2016 ஆம் ஆண்டில், ரியோ விளையாட்டுப் போட்டியில் டயஸ் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், 2018 ஆம் ஆண்டில் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment