தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி : பி.சி.ஆர். பரிசோதனையின் அளவும் குறைவு - காரணம் இதுதான்...! - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி : பி.சி.ஆர். பரிசோதனையின் அளவும் குறைவு - காரணம் இதுதான்...!

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களாக இவ்வாறு இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் கடந்த மாதங்களில் நாளாந்தம் சுமார் 28000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அது 14 000 ஆகக் குறைவடைந்தது.

நேற்று முன்தினம் 9000 பி.சி.ஆர். பரிசோதனைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 7 மணி வரை 816 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதிக்கு பின்னர் ஆயிரத்திற்கும் குறைவான தொற்றாளர்கள் நேற்றைய தினமே இனங்காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் சுகாதார தரப்பினரின் வேலை நிறுத்த போராட்டத்தால் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடைந்தமையே இதற்கான காரணம் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவிக்கிறது.

அதற்கமைய இதுவரையில் நாட்டில் 266211 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 234942 பேர் குணமடைந்துள்ளதோடு , 28 033 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3268 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments:

Post a Comment