மீண்டும் தலிபான்களின் உண்மையான முகத்திரை - News View

Breaking

Tuesday, July 27, 2021

மீண்டும் தலிபான்களின் உண்மையான முகத்திரை

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை நோக்கி தலிபான்கள் நகர்ந்து அதிகாரத்திற்கான தனது ஆக்கிரமிப்பை நிலைநிறுத்தியுள்ளனர். சில மாவட்டங்களில் தலிபான்கள் பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

தலிபான்களின் இலக்குகள் அனைத்துமே அதன் நம்பிக்கைகள் மற்றும் நலன்களுக்கு விரோதமானவை என்று கருதப்படுகின்றது.

குறிப்பாக பெண்கள் மற்றும் அமெரிக்க, மேற்கத்திய படைகள், மத சிறுபான்மையினர் மற்றும் ஆப்கானிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு உதவிய பொதுமக்கள் என அனைத்து தரப்புகளுமே தலிபான்களின் தற்போதைய இலக்குகலாகியுள்ளன.

ஈரான் மற்றும் துர்க்மெனிஸ்தானுடனான முக்கிய எல்லைக் கடப்புகளைக் கைப்பற்றிய பின்னர், தலிபான்கள் இப்போது நாட்டின் கணிசமான இடங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல முக்கிய இடங்களை கைப்பற்றியுள்ளனர். பல ஊடக அறிக்கைகளின்படி, இந்த பிராந்தியங்களில் பெண்களின் கல்வி மற்றும் சுதந்திரம் குறித்து தலிபான்கள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த கட்டுப்பாடுகளால் பெண்கள் இனி பள்ளிக்கு செல்ல முடியாது. பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும். ஒரு ஆண் உறவினருடன் இல்லாவிட்டால் அவர்கள் சந்தைக்கு செல்ல முடியாது போன்ற கடுமையான விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ஷரியா சட்டத்தின் கடுமையான விளக்கத்தை பின்பற்றுமாறு தலிபான்கள் ஆப்கானியர்களை கட்டாயப்படுத்திய 2001 க்கு முந்தைய காலங்களுக்கு மீண்டும் திரும்பியுள்ளதனையே தற்போதைய நிலைமைகள் உணர்த்துகின்றன.

பெண்கள் தங்களை தலை முதல் கால் வரை மறைக்கும்படி கட்டாயப்படுத்தினர். ஆப்கானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, சுமார் 30 வீதமான அரசு பெண் ஊழியர்கள் தலிபான் ஆட்சியின் போது வீடுகளுக்கு வெளியே வேலை செய்ய அனுமதியில்லை.

இந்த பிற்போக்கு விதிகள் ஆண்களுக்கும் பொருந்தும். தாடியை வளர்க்கச் சொல்கின்றனர். பால்க் மாகாணத்தில் வசிப்பவர்கள் பலருக்கு தலிபான்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

உள்ளூர்வாசிகளுக்கு இந்த கடுமையான விதிகளைப் பின்பற்றும்படி கட்டளையிட்டப்பட்டுள்ளது. தாடியை மொட்டையடிக்கவோ அல்லது ஒழுங்கமைக்கவோ கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தலிபான்கள் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் தனது கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த மாதம் தீவிரவாதிகள் மாவட்டத்திற்குள் நுழைந்தபோது இஸ்லாமிய பிரார்த்தனைகள், தலிபான் சார்பு கோஷங்கள் மற்றும் இசைக்கு பதிலாக அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரங்களை ஒளிபரப்ப பால்க் மாவட்டத்தின் ஒரே வானொலி நிலையமான நவ்பஹரை தலிபான் கட்டாயப்படுத்தியதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் ஊடக கண்காணிப்புக் குழுக்களின் கருத்துப்படி, தலிபான்களின் கட்டுப்பாடுகள் காரணமாக கிட்டத்தட்ட 20 வானொலி நிலையங்கள் வடக்கு மாகாணங்களில் ஒளிபரப்பப்படுவதை நிறுத்திவிட்டு அவை பிரச்சார ஆதாரங்களாகப் பயன்படுத்துகின்றன.

இதன் பொருள் என்னவென்றால், வெளிநாட்டு ஊடகங்களின் அணுகல் தலிபான் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில், சர்வதேச சமூகத்திற்கான தகவல் பரிமாற்றத்தில் 'கண்கள் மற்றும் காதுகளாக' உள்ளூர் ஊடகங்கள் வேலை செய்ய இயலாது என்பதாகும்.

இதன் மூலம் உலகின் பிற பகுதிகளுடனான தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றது. இது தலிபான்களின் மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியங்களை வெளிப்படுத்துகின்றது.

மனித உரிமைகள் கண்காணிப்பு தரவுகளின் படி, குண்டுஸ் மாகாணத்தில் உள்ள பாக்-இ ஷெர்காட்டில் வசிப்பவர்களை வெளியேறுமாறு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிய அரசாங்கத்திற்கு கடந்த கால ஆதரவை வழங்கியவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர். வீடுகளை சூறையாடி எரித்துள்ளனர். குறிப்பாக வடக்கில், சமீபத்திய மாதங்களில் 270,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

மேலும், அமெரிக்க படைகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ள நிலையில் தலிபான்கள் ஹெராத் மாகாணத்தில் ஹசாரா மற்றும் ஷியாக்களை குறிவைத்துள்ளனர்.

சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்கானிஸ்தானின் தூதரகம் மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான பயங்கரமான அட்டூழியங்களைக் காண்பிக்கும் தொடர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டது.

22 ஆப்கானிய கமாண்டோக்களை தலிபான்கள் தூக்கிலிட்டதைக் காட்டும் வீடியோவும் வெளியிடப்பட்டது. இவை அனைத்து பாரிய போர்க்குற்றங்கள் என்பதுடன் மனித உரிமைகளுக்கு சவாலான விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment