ஒலிம்பிக்கில் கொரோனா பரிசோதனைக்கு எச்சிலை துப்பிக் கொடுத்தால் போதும் - News View

Breaking

Friday, July 23, 2021

ஒலிம்பிக்கில் கொரோனா பரிசோதனைக்கு எச்சிலை துப்பிக் கொடுத்தால் போதும்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் எவருக்கேனும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தால் அந்த நபர் உடனடியாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். தேவையேற்படின் சிகிச்சையளிக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்.

இந்தப் பரிசோதனையானது வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்திலும் ஊடகவியலாளர்கள் கடமையாற்றும் ஊடக நிலையத்திலும் மேற்கொள்ப்படுகின்றது.

இதில் வளமையான பி.சீ.ஆர். முறையோ அல்லது அன்டிஜன் முறையோ அல்ல. மருத்துவ பிரிவினால் வழங்கப்படும் ஒரு சிறு பிளாஸ்டிக் குழாயில் எச்சிலை சிறிது நிரப்பி கொடுக்க வேண்டும். அது பின்னர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும், அரை மணித்தியாலய இடைவெளியில் பரிசோதனைகள் முடிவுகள் வந்து விடுகின்றன.

இந்தப் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அங்கே மேற்கொண்டு நாம் கடமையாற்றலாமா இல்லையா என்பது முடிவாகின்றது என்கிறார் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்.

No comments:

Post a Comment

Post Bottom Ad