பிரான்ஸ் கொரோனாவின் 4 ஆவது அலைக்குள் சென்றது : மிகவும் ஆபத்தான டெல்டா வைரஸ் இங்கே உள்ளது என்கிறார் அந்நாட்டு பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Friday, July 23, 2021

பிரான்ஸ் கொரோனாவின் 4 ஆவது அலைக்குள் சென்றது : மிகவும் ஆபத்தான டெல்டா வைரஸ் இங்கே உள்ளது என்கிறார் அந்நாட்டு பிரதமர்

பிரான்ஸ் தற்போது கொரோனாவின் 4 ஆவது அலைக்குள் சென்றுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளதாவது, "நாங்கள் நான்காவது அலையில் இருக்கிறோம், உருமாறிய டெல்டா வைரஸ் இங்கே உள்ளது.

இது மிகவும் ஆபத்தான டெல்டா வைரஸ் ஆகும். நாங்கள் எதிர்த்து போராட வேண்டும். அதே நேரத்தில் இது முற்றிலும் புதியதல்ல. ஆனால் இந்த உருமாறிய டெல்டா வைரஸ் தொற்று அதிகமாக பரவும், இதனால் நாங்கள் தடுப்பூசி போட வேண்டும்," என தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் 18,181 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது. இது முந்தைய வாரத்தைவிட 140 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் புதிய தொற்றாளர்களில் 96 சதவீதம் தடுப்பூசி போடத மக்களில் காணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment