ஹிஷாலினிக்கு நீதிகோரி கம்மன்பில தலைமையில் விசேட நிகழ்வு - News View

Breaking

Thursday, July 29, 2021

ஹிஷாலினிக்கு நீதிகோரி கம்மன்பில தலைமையில் விசேட நிகழ்வு

(எம்.மனோசித்ரா)

சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மகா சங்கத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுமி ஹிஷாலினி, பாடசாலை மாணவி வித்தியா உள்ளிட்ட சிறுமிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.

அமைச்சர் உதய கம்மன்பில, பிவிதுரு ஹெல உருமயவின் செயலாளர் உபுல் விஜேசேகர, பிரதி தேசிய அமைப்பாளர் யசபால கோரளகே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad