கொவிட் சிக்கலால் நிமோனியாவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ரொனால்டோவின் சகோதரி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

கொவிட் சிக்கலால் நிமோனியாவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ரொனால்டோவின் சகோதரி

கிறிஸ்டோனோ ரொனால்டோவின் சகோதரி கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் நிமோனியாவுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்சமயம் 43 வயதான கட்டியா அவிரோ, போர்த்துக்கல் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மதீராவில் அமைந்துள்ள வைத்தியசாலையில் இருப்பதாக இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி பாடகியான கட்டியா அவிரோ, டாக்டர் நெலியோ மென்டோன்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே வைத்தியசாலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தாயார், பக்கவாதத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த ஆண்டு ஒக்டோபரில் கொவிட் தொற்றுக்குள்ளானர். அவர் வைரஸ் தொற்றுக்கு அறிகுறியற்றவராக இருந்தபோதிலும், கொவிட்-19 க்கு சாதகமாக இருமுறை பரிசோதனை மேற்கொண்டார்.

கொவிட் தொற்று குறித்து கருத்து தெரிவித்துள்ள கட்டியா அவிரோ, நான் ஜூலை 17 அன்று கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை மேற்கொண்டேன். அன்றிலிருந்து வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நான் சில கொவிட் அறிகுறிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வந்தேன். எனினும் துரதிர்ஷ்டவசமாக கடந்த வெள்ளிக்கிழமை எனது உடல் நிலை மோசமடைந்தது.

பின்னர் வைரஸ் தாக்கத்தின் விளைவாக நான் நிமோனியாவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். நான் பொது வெளியில் இருப்பதாக வெளியிட்டுள்ள காணொளிகள் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்வதற்கு முன்னர் எடுக்கப்பட்டவை என்றார்.

No comments:

Post a Comment