புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் வளர்ச்சிற்கு புதிய மாற்றங்கள் விரைவில் எடுக்கப்படும் - அலி சப்ரி ரஹீம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் வளர்ச்சிற்கு புதிய மாற்றங்கள் விரைவில் எடுக்கப்படும் - அலி சப்ரி ரஹீம்

சில்மியா யூசுப்

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் வளர்ச்சிற்கு புதிய மாற்றங்கள் விரைவில் கொண்டுவர எதிர்பார்க்கின்றேன் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.

புத்தளம் ஸாஹிரா பாடசாலை அதிபர் I.A. நஜீம் மற்றும் பாடசாலை ஆசியர்களின் வேண்டுகோளிற்கினங்க புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களுடன் 5ம் திகதி ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்

மேலும் அவர் அங்கு பாடசாலையின் வளர்ச்சி, கல்வியின் முன்னேற்றம், மாணவர்களின் ஒழுக்கம், விருத்தி, பௌதிக வள அபிவிருத்தி போன்ற பல விடயங்களை கலந்துரையாடினார்.

அத்துடன், "பாடசாலை வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமான சகல உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் தன்னால் வழங்க முடியும் என்றும் ,புதிய அதிபர் ஊடாக குறுகிய காலத்தில் பாடசாலையின் மாற்றத்தை எதிர் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்."

இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கு பாடசாலை அதிபர் I.A. நஜீம் அவர்களினால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment