வழக்குத் தொடுத்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - News View

About Us

About Us

Breaking

Friday, July 9, 2021

வழக்குத் தொடுத்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Twitter, Facebook, Google ஆகிய தளங்கள் மீது, வழக்குத் தொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

அவை பாரபட்சமாக, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக நடந்துகொண்டதாய் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பேச்சுரிமையை நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதாய்க் கூறி மயாமியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

நிறுவனங்கள் நியாயமற்ற வகையில் தங்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறும் மற்ற பல பயனீட்டாளர்களுக்காகவும் தாம் குரல் கொடுக்கவிருப்பதாய்த் ட்ரம்ப் கூறினார்.

Facebook நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg), டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சே (Jack Dorsey), Google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

செய்தியாளர் கூட்டத்தில் அந்த விவரங்களைத் ட்ரம்ப் அறிவித்தார். நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதன் தொடர்பில் இன்னமும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment