சட்டமா அதிபரின் உறுதிப்பாடு கிடைத்தது - பசு வதையை தடை செய்ய சட்ட மூலம் : முழுமையான தடை விரைவில்? - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

சட்டமா அதிபரின் உறுதிப்பாடு கிடைத்தது - பசு வதையை தடை செய்ய சட்ட மூலம் : முழுமையான தடை விரைவில்?

பசு வதையை முற்றாக தடை செய்வதற்கான சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் உறுதிப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்ட மூலம் அடுத்து சில வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்பட உள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தசாசன அமைச்சர் என்ற அடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர், சட்ட மூலத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதையடுத்து, ஏழு நாட்களின் பின்னர் இச் சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும்.

இதற்கமைவான, எண்ணக்கரு பத்திரத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad