தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் ஊடுருவிய சீன போர் விமானங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் ஊடுருவிய சீன போர் விமானங்கள்

தாய்வான் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் சீன போர் விமானம் தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்துள்ளது, இந்த மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது ஊடுருவல் இதுவாகும்.

தேசிய பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, மக்கள் விடுதலை இராணுவ விமானப்படை (PLAAF) ஷான்சி Y-8 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானம் தாய்வானின் தென்மேற்கு மூலையில் நுழைந்ததாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தாய்வான் விமானங்களை அனுப்பி எச்சரிக்கை வீடுக்கப்பட்டது. இதனை கண்காணிக்க வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளையும் தாய்வான் தயார் நிலையில் வைத்தது.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இரு தரப்பினராலும் தனித்தனியாக இந்த நாடு ஆளப்பட்டிருந்தாலும், சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சுமார் 24 மில்லியன் மக்களை கொண்ட இந்த நாட்டின் முழு இறையாண்மையை பெய்ஜிங் கோருகிறது. 

இந்த மாதத்தில் ஜூலை 2 மற்றும் ஜூலை 3 ஆகிய திகதிகளில் தாய்வானின் எல்லைகளில் சீன விமானங்கள் கண்காணிப்பில் ஈடுப்பட்டன.

ADIZ என்பது ஒரு நாட்டின் வான் வெளியைத் தாண்டி விரிவடைந்த பிரதேசம் என்பதோடு அதன் வழியாக பயணிக்கும் விமானங்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். 

சாம்பல் வலய தந்திரோபாயங்கள் "நிலையான மற்றும் தடுப்பு மற்றும் உத்தரவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு முயற்சி அல்லது தொடர்ச்சியான முயற்சிகள்'' என வரையறுக்கப்படுகின்றன.

இது ஒரு நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களை நேரடியாகவும் கணிசமான அளவிலும் அடைய முயற்சிக்கும் செயல் என்று தாய்வான் செய்திகள் தெரிவித்துள்ளன.

தேசிய பாதுகாப்பு அமைச்சின் தரவுகளை மேற்கோள் காட்டி, சீன விமானங்கள் தாய்வானின் அடையாள வலயத்தில் ஜூன் மாதத்தில் 10 முறை, மே மாதத்தில் 18 முறை, ஏப்ரல் மாதத்தில் 22 முறை, மார்ச் மாதத்தில் 18 முறை, பெப்ரவரியில் 17 முறைகள் மற்றும் ஜனவரியில் 27 முறை கண்காணிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment