இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் பல நகரங்களில் சிகிச்சைக்கு ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காராணமாக அந்நாட்டு அரசாங்கம் மருத்துவ தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஒட்சிசன் உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் ஒட்சிசன் பற்றாக்குறையால் 63 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ஒவ்வொரு நாளும் 25,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகிறர்கள். இதற்கு இந்தோனேசியாவில் அதிகரித்துள்ள பயணங்களும், உருமாறிய டெல்டா வைரஸ் பரவலுமே காரணமாக அமைந்துள்ளது.
தென் கிழக்காசிய நாடுகளில் இந்தோனேஷியா கொரோனா தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை சுமார் 2,284,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 60,582 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள்.
இருப்பினும், தலைநகர் ஜகார்த்தாவிற்கு வெளியே போதிய பரிசோதனை நடவடிக்கை இல்லாமையால் ஒட்டுமொத்த எண்கள் மிக அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவிலும், சுற்றுலா தீவான பாலி நகரிலும் கடந்த வாரம் ஊரடங்கு அமுல்படுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment