தற்போதைய அரசாங்கம் நாட்டை மிகப்பாரிய சமூக, பொருளாதார அழிவை நோக்கி நகர்த்திச் செல்கின்றது - விஜித் விஜயமுனி சொய்சா - News View

Breaking

Tuesday, July 27, 2021

தற்போதைய அரசாங்கம் நாட்டை மிகப்பாரிய சமூக, பொருளாதார அழிவை நோக்கி நகர்த்திச் செல்கின்றது - விஜித் விஜயமுனி சொய்சா

(நா.தனுஜா)

நாட்டை மிகப்பாரிய சமூக, பொருளாதார அழிவை நோக்கி தற்போதைய அரசாங்கம் நகர்த்திச் செல்கின்றது. இப்போது அமெரிக்கர்களே நாட்டை ஆட்சி செய்கின்றார்கள் என விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் எனவே பொதுமக்களுக்குப் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களை வீதிகளில் இறங்கிப் போராடச் செய்வதுடன் மறுபுறம் இனவாதத்தைத் தூண்டி கடந்த காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற கலவரத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதுபோல் தோன்றுகின்றது.

அதன் மூலம் ஹெய்ட்டியைப் போன்று இங்கும் பிற நாட்டு அமைதிப் படைகள் நிலைநிறுத்தப்படுவதற்கான அடித்தளம் இடப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி காலிமுகத்திடலில் 20 ஏக்கர் நிலப்பரப்பு, பெல்வத்தவில் 1,200 ஏக்கர் நிலப்பரப்பு, மொனராகலையிலும் அம்பாந்தோட்டையிலும் தலா 5,000 ஏக்கர் நிலப்பரப்பு, கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சிற்குச் சொந்தமான இடம், கஃபூர் கட்டடம், கிராண்ட்பாஸ் ஒரியென்டல் ஹோட்டல், யோர்க் கட்டடம், தபால் மத்திய நிலைய நிலப்பரப்பு, காங்கேசன்துறை தேசிய அபிவிருத்தி மத்திய நிலையம், ஹில்டன் ஹோட்டல் உள்ளடங்கலாக நாட்டின் தேசிய சொத்துக்களையும் காணிகளையும் வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment