வூஹான் வைரஸ் ஆய்வாளருக்கும், இராணுவ விஞ்ஞானிகளுக்கும் இடையே தொடர்பு : கொவிட் தோற்றம் பற்றி வெளியாகும் புதிய தகவல்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

வூஹான் வைரஸ் ஆய்வாளருக்கும், இராணுவ விஞ்ஞானிகளுக்கும் இடையே தொடர்பு : கொவிட் தோற்றம் பற்றி வெளியாகும் புதிய தகவல்கள்

கொவிட்-19 வைரஸ் தோற்றம் பெற்ற வூஹான் மாகாண வைரஸ் துறை ஆய்வாளருக்கும் இரண்டு சீன இராணுவ விஞ்ஞானிகளுக்கும் இடையே ஆய்வு ரீதியான தொடர்புகள் நிலவியதாகவும் பின்னர் இவ்விரு விஞ்ஞானிகளில் ஒருவர் காரணம் கண்டுபிடிக்கப்பட முடியாத நிலையில் மரணமானார் என்றும் அமெரிக்க ஊடகத் தகவல்களை மேற்கோள்காட்டி பொக்ஸ் நியுஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

வூஹான் வைரஸ் ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர் ஷி ஷென்ங்லி இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தாலும் இது தொடர்பான ஆதாரங்களை ஒன்று சேர்த்து பார்க்கும் போது மருத்துவர் ஷீக்கும் இராணுவ விஞ்ஞானி இருவருக்கும் இடையே தகவல் பரிமாற்றத் தொடர்பு இருந்திருப்பது நிரூபணமாகிறது என்று பொக்ஸ்நியுஸ் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

ஷூ ஷென்ங்லி வௌவால் கொரோனா வைரசை மையமாகக் கொண்டு ஆபத்தான ஒரு ஆய்வை மேற்கொண்டதாக அவர் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இவர் 2018ம் ஆண்டு இராணுவ விஞ்ஞானியான டொன்யீகாங் மற்றும் ஷூ யூசென் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதாகவும் பின்னர் ஷூ மர்மமான சூழலில் மரணித்ததாகவும் தெரியவந்துள்ளது.

கொவிட் வைரசின் தோற்றம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உலகளாவிய அழுத்தம் ஏற்பட்டபோது அதை சீனா எதிர்த்து நின்றதோடு தம்மீது பழி சுமத்தப்படுவதாகவும் கூறி ஆய்வுகளை மாதக்கணக்கில் தாமதப்படுத்தியதாகவும் வோல் ட்ஸ்ட்ரீட் பத்திரிகை தான் மேற்கொண்டு ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வாளர் குழு சீனாவுக்கு சென்றபோதும் சீனா மேற்கொண்டிருக்கக் கூடிய ஆய்வுகள் தொடர்பான ஒரு தெளிவை அதனால் பெற முடியவில்லை.

இந்நோய் தொடர்பான முதல் கட்ட ஆதாரங்களை உலக சுகாதார ஸ்தாபன ஆய்வாளர்களிடம் வழங்க சீனா மறுத்ததாகவும் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment