அடையாள அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு : ஓருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

அடையாள அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு : ஓருவர் கைது

(எம்.மனோசித்ரா)

கிரிபத்கொட பொலிஸாருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் வீவெல்துவ பிரதேசத்தில் போலி அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரிக்கும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது 66 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நிலையத்திலிருந்து 5 போலி அடையாள அட்டைகள், போலி வாகன அனுமதிப்பத்திரம், 5 அச்சு இயந்திரங்கள், 90 லெமினேட் கடதாசிகள் என்பன மீட்க்கப்பட்டுள்ளன. அதற்கமைய இங்கு வெவ்வேறு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை சாட்சிகள் ஊடாக தெரியவந்துள்ளது.

வெவ்வேறு காரணிகளுக்காக சிலர் இவ்வாறு போலி ஆவணங்களைத் தயாரிக்கின்றனர். எனினும் போலி ஆவணங்களைத் தயாரித்தல், அவற்றை தம்வசம் வைத்திருத்தல், அவற்றை உபயோகித்தல் என்பன குற்றமாகும்.

குறிப்பாக பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவை இவ்வாறு போலியான வகையில் தயாரிக்கப்படுதல் என்பன 3 வருட சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்களாகும். இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரவித்தார்.

No comments:

Post a Comment