ரிசாட் பதியுதீனின் வேண்டுகோள் மறுப்பு : பாதுகாப்பு அமைச்சின் பதில் நீதிமன்றுக்கு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 15, 2021

ரிசாட் பதியுதீனின் வேண்டுகோள் மறுப்பு : பாதுகாப்பு அமைச்சின் பதில் நீதிமன்றுக்கு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை வீட்டுக் காவலில் வைக்குமாறு கோரி நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு பாதுகாப்பு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனும் அவரது சகோதரரும் அவர்களின் சட்டத்தரணியான பைசர் முஸ்தபா மூலம் மேற்படி வேண்டுகோளை நீதிமன்றத்திடம் விடுத்திருந்தனர். 

அந்த வேண்டுகோளுக்கு பாதுகாப்பு அமைச்சரின் இணக்கம் கிடைக்கவில்லையென சட்டமா அதிபர் நேற்று நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனும் அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீனும் தற்போது குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

எவ்வித நீதியான காரணமும் இல்லாமல் தம்மைக் கைது செய்து குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானதென தெரிவித்து ரிசாத் பதியுதீனும் அவரது சகோதரரும் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் மேற்கண்டவாறு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment