கொரோனா வைரஸ் டெல்டா திரிபு : அம்மை நோயை போன்று பரவும் தன்மை கொண்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, July 31, 2021

கொரோனா வைரஸ் டெல்டா திரிபு : அம்மை நோயை போன்று பரவும் தன்மை கொண்டது

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள். தடுப்பூசிகள் நோய்த் தொற்றின் 90 சதவீத தீவிரத்தை தடுக்கிறது.

இந்தியாவில் பி.1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டி உள்ளது. 

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைக்கு ஒரு முக்கியக் காரணம் இந்த டெல்டா திரிபு. முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலை இந்தியாவை மிக மோசமாகப் பாதித்தது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமானது.

டெல்டா வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவி விட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸின் டெல்டா வகை திரிபு அதிக பரவல் தன்மை கொண்டது என்றும், கொரோனா வைரஸின் இதுவரை இல்லாத திரிபை காட்டிலும் இந்த வகை திரிபு அதிக தீவிரத்தன்மை கொண்டது என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் வெளியிடப்படாத அறிக்கையை சுட்டிக் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் செய்தியில் உள்ள 10 முக்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்படுகிறது.

1. சார்ஸ், இபோலா, சீசன் ஃபுளு, ஆகியவற்றுக்கும் காரணமான வைரஸை காட்டிலும் இது அதிகம் பரவக் கூடியது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2. அம்மை நோயின் அளவுக்கு இது பரவக்கூடியது என்றும் அந்த அறிக்கையை சுட்டிக் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

3. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கை முதலில் வாஷிங்டன் போஸ்டில் வெளியானது. டெல்டா வகை கொரோனா திரிபின் வீரியம் குறித்து எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் அந்த அறிக்கை உள்ளதாக கூறப்படுகிறது.

4. டெல்டா வகை திரிபு, நோய் தொற்றை அதிகரிப்பதுடன், மருத்துவமனைக்கு செல்லும் அளவிற்கு தீவிரமாக்கும் தன்மை கொண்டது.

5. மேலும் இரு டோஸ் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்களும் தடுப்பு மருந்தை எடுத்து கொள்ளாதவர்களுக்கு இணையாக தொற்றை பரப்ப முடியும் எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்திருந்தாலும், தடுப்பு மருந்தால் பெருந்தொற்றை பெரிதும் கட்டுப்படுத்த முடியும்.

6. உலகளவில் கொரோனா தொற்றால் அமெரிக்காவில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை அளவிலும் உலகளவில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது.

7. தற்போது கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். தடுப்பு மருந்து பயன்பாட்டை அதிகரிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

8. அதில் ஒரு நடவடிக்கையாய் இன்று தடுப்பூசி போட்டால் 100 டாலர் ஊக்கத் தொகை வழங்க மாநிலங்களுக்கு ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

9. அமெரிக்காவில் தொற்று குறைந்திருந்த நிலையில் தற்போது சமீபமாக இல்லாத அளவில் புதிய தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது. சுமார் 60 ஆயிரம் பேர் நாள் தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

10. டெல்டா வகை தொற்று அதிகரித்துள்ளதால் அங்கு முகக்கவசம் அணிவதற்கான வழிமுறைகளை கடந்த வாரம் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment