வெளிநாடுகளிலிருந்து முதற்கட்ட தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொண்டவர்களில் 75 பேர் மாத்திரமே ஒரு விமானத்தின் ஊடாக அழைத்து வரப்படலாம் என்று விதிக்கப்பட்டிருந்த வரையறைகள் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய விமானத்தில் அழைத்து வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தாது, இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களை அழைத்து வருவதற்கு நாளை மறுதினம் முதலாம் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கை வரும் பயணிகள் தாம் இரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளமைக்கான அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு உயிர் குமிழி முறைமை ஊடாக (பயோ பபிள்) இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment