இந்து கலாசார திணைக்களத்தின் கீழ் இயங்கி வந்த யாழ். நாவலர் கலாசார மண்டபம் ஒரு சில காரணத்தால் யாழ் மாநகர சபையின் கீழ் தற்காலிகமாக பல வருடங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், டக்ளஸ் தேவானந்தா இந்து கலாசார அமைச்சராக இருந்த காலத்தில் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தார். இருப்பினும் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் அது கைக்கூடவில்லை.
இது தொடர்பில், பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளரும் சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளருமான கலாநிதி சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா சகல ஆவணங்களையும் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரனிடம் பெற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அமைச்சரின் அலுவலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.
இவ்விடயம் அமைச்சரினூடாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் இந்து கலாசார திணைக்களத்தின் கீழ் யாழ். நாவலர் கலாசார மண்டபம் கொண்டுவரப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment