மக்களைப் பற்றி சிந்தித்து செயற்பட்ட பஷில் அமைச்சு பதவியேற்றால், பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்துவார் - நிமல் லன்சா - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

மக்களைப் பற்றி சிந்தித்து செயற்பட்ட பஷில் அமைச்சு பதவியேற்றால், பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்துவார் - நிமல் லன்சா

(எம்.மனோசித்ரா)

வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், திவி நெகும உள்ளிட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வறுமையான மக்களைப் பற்றி சிந்தித்து செயற்பட்ட பஷில் ராஜபக்ஷ அமைச்சு பதவியேற்றால், பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்துவார். அவரது வருகையை அனைவரும் விரும்புகின்றனர் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை நீர்கொழும்பு கடற்கரையில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், பஷில் ராஜபக்ஷ வந்ததன் பின்னர் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார். அதில் எமக்கு எவ்வித சிக்கலும் கிடையாது. அவர் சிறப்பாக சேவையாற்றக் கூடியவராவார். சேவை செய்து நிரூபித்து காட்டியவருமாவார். 

அவரே வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், திவி நெகும உள்ளிட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வறுமையான மக்களைப் பற்றி சிந்தித்து செயற்பட்டவராவார். எனவே அவர் வந்ததன் பின்னர் பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்துவார். அவரது வருகையை அனைவரும் விரும்புகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment