புதிய நிதியமைச்சர் பஷிலுக்கு டெல்லியிலிருந்து வாழ்த்து கடிதம் - News View

Breaking

Wednesday, July 14, 2021

புதிய நிதியமைச்சர் பஷிலுக்கு டெல்லியிலிருந்து வாழ்த்து கடிதம்

(இராஜதுரை ஹஷான்)

புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பஷில் ராஜபக்ஷவிற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து கடிதத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நேரில் சந்தித்து கையளித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னர் உலகளாவிய பொருளாதார மீட்சி என்ற பின்னணியில் பொருளாதாரத்துறையில் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் சந்திக்கும் வெளிநாட்டு இராஜதந்திரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பூகோளிய பொருளாதாரத்தில் இருந்து மீள்வது குறித்து இலங்கை அதிக கவனம் செலுத்தியுள்ள நிலையில் பொருளாதார விடயங்களில் ஆசிய வலய நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நிதியமைச்சர் உள்ளார். அவ்வாறானதொரு பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை முக்கியமானதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad