சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் இணையத்தளங்கள் தொடர்பில் கண்காணிப்புகள் உள்ளனவா ? - விசேட ஆய்வறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 6, 2021

சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் இணையத்தளங்கள் தொடர்பில் கண்காணிப்புகள் உள்ளனவா ? - விசேட ஆய்வறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது நீதிமன்றம்

(எம்.எப்.எம்பஸீர்)

சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் இணையத்தளங்கள் தொடர்பில் கண்காணிப்புகள் உள்ளனவா என, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவூடாக விசேட ஆய்வறிக்கையொன்றினை பெற்று அதனை மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம நேற்று முந்தினம் உத்தரவிட்டார்.

சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் வலையமைப்பு தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்யே, 15 வயது சிறுமி ஒருவர் இணையத்தளங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ள நிலையில் நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதன் பின்ணனியிலேயே, நீதிவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

பெண்களையும் சிறுமிகளையும் இணையத்தளங்களில் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில், அவ்வாறான இணையத்தளங்கள் தொடர்பில் மேற்பார்வைகள் ஏதும் உள்ளனவா என்பது குறித்தும் வெளிப்படுத்திக்கொள்ளவே நீதிவான் இவ்வறிக்கை கோரலுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment