போதைக்கெதிராக வீதியில் இறங்கிய பிறைந்துரைச்சேனை பொதுமக்கள் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

போதைக்கெதிராக வீதியில் இறங்கிய பிறைந்துரைச்சேனை பொதுமக்கள்

வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனையில் அதிகரித்துள்ள போதை வியாபாரம், போதைப் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரி பிரதேச பொதுமக்கள் 15.07.2021 இன்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அத்துடன், நடைபவணியாக வந்து வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் முன்னாலும் போதைக்கெதிராக பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு சிலரின் நடவடிக்கையினால் முழுப்பிரதேசத்துக்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருவதுடன், போதையைக் கட்டுப்படுத்துவதிலும் இல்லாதொழிப்பதிலும் பல்வேறு சவால்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் எதிர்கொண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வார்ப்பாட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.

போதை ஒழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கது இருந்த போதிலும் பிறைந்துரைச்சேனை பகுதியில் அதிகமாக இளைஞர்களை குறி வைத்து போதைவஸ்து பாவனை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. 

ஆகவே, தயவு செய்து இப்பிரதேசத்தில் போதை பாவனையை முற்று முழுதாக இல்லாதொழிக்க அரசாங்கம் விசேட பிரிவு ஒன்றை ஆரம்பித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad