டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்காக பிரதான அரங்கத்தில் 950 பேருக்கு அனுமதி - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்காக பிரதான அரங்கத்தில் 950 பேருக்கு அனுமதி

நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவினை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 950 பேர் பிரதான அரங்கத்தில் பார்க்கவுள்ளனர்.

அந்தக் குழுவிற்கு மேலதிகமாக விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு உறுப்பினர்களும் பங்கேற்பார்கள்.

அதில் இருந்து போட்டிகளை நேரடியாக பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் முக்கிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஹிடேமாசா நகாமுரா வியாழக்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 23) ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழவிற்கு முன்னதாக விளையாட்டுகளுடன் தொடர்புடைய 85 க்கும் மேற்பட்டவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad